அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் இந்திய மொழிகள்: தமிழ் மொழிக்கு எந்த இடம் தெரியுமா?

118

அமெரிக்காவில் அதிகம் பேரால் பேசக்கூடிய இந்திய மொழிகளில், தமிழ் 3வது இடத்தில் உள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 30.5 கோடியில், வெளிநாட்டு மொழி பேசுபவர்களின் எண்ணிக்கை 6.7 கோடியாகும்.

இந்நிலையில் The American Community Survey நடத்திய ஆய்வில், அமெரிக்காவில் தமிழ் பேசும் மக்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 84 ஆயிரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

அந்நாட்டில் இந்திய மொழிகளில் அதிகம் பேரால் பேசப்படும் மொழி எது என்பதற்காக நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில், 8 லட்சத்து 63 ஆயிரம் பேரால் பேசப்படுவதால் ஹிந்தி முதலிடத்திலும், 4 லட்சத்து 34 ஆயிரம் பேரால் பேசப்படுவதால் குஜராத்தி இரண்டாவது இடத்திலும் உள்ள நிலையில், தமிழ் மொழி 3வது இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் தமிழ் பேசுவோரின் எண்ணிக்கை 55 சதவிதமாக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

SHARE