ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
ஐக்கிய நாடுகளின் விசேட அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்ற நிலையில் இந்த சந்திப்பு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது.
ஸ்ரீலங்காவில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகிய முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பின்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.