அமெரிக்காவில் மாயமான இந்திய மாணவர் சடலமாக மீட்பு

119

 

அமெரிக்காவில் காணாமல்போன இந்திய மாணவர் சடலாம மீட்கப்பட்டுள்ள சம்பவம் ம்திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த மாணவர் நீல் ஆச்சர்யா, அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள பர்டூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். இதற்கிடையே அவர் நேற்று முன்தினம் திடீரென்று மாயமானார்.

இதுகுறித்து நீல் ஆச்சாரியாவின் தாய் ,

எனது மகன் நீல் ஆச்சார்யா மாயமாகி உள்ளார். அவரை கடைசியாக பல்கலைக்கழகத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட உபெர் டிரைவர் பார்த்துள்ளார்.

எனது மகனை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என டிவிட்டரில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து நீல் ஆச்சார்யாவை கண்டுபிடிக்க அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தெரிவித்தது.

இந்த நிலையில் மாயமான மாணவர் நீல் ஆச்சார்யா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஒரு பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். எனினும் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

SHARE