அமெரிக்காவின் அதிகாரத்துக்கு உட்பட்ட குவாம் தீவை தாக்கப் போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது.
இதன்படி விரிவான வரைபடங்களுடனும், விளக்கங்களுடனும் வடகொரியாவின் அரசு தொலைக்காட்சியில் தாக்குதல் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து வடகொரியா ஏவுகணைப் பிரிவு தளபதி கிம் ராக்கி யோம் கூறியதாவது, அமெரிக்காவின் ஆட்சிக்கு உட்பட்ட குவாம் தீவைத் துல்லியமாக தாக்கும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது, ஆகஸ்ட் மாதத்திற்குள் திட்டம் நிறைவேற்றப்படும்.
தாக்குதலின் போது ஒரே நேரத்தில் நான்கு ஏவுகணைகள் செலுத்தப்படும், அந்த ஏவுகணைகள் ஜப்பானின் ஷிமானே, ஹிரோஷிமா, கோயிச்சி பகுதிகளின் வான் எல்லைகள் வழியே குவாம் தீவைத் தாக்கும்.
கிம் ஜோங் உன்னின் கட்டளைப்படி அடுத்தகட்ட நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் மேற்கொள்ளும் என தெரிவித்துள்ளார்.