இந்தியா ரஸ்யாவிடமிருந்து ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை கைவிடவேண்டும் இல்லையேல் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் அமெரிக்கா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று இந்தியாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே அமெரிக்கா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இந்தியாவிற்கு இன்று விஜயம் மேற்கொள்ளவுள்ள ரஸ்ய ஜனாதிபதியுடன் 40 ஆயிரம் கோடி மதிப்புள்ள எஸ் 400 ஏவுகணைகளை வாங்குவது குறித்து இந்தியா ஒப்பந்தம் செய்யவுள்ளது.
இவ்வாறான நிலையில் ரஸ்யாவிடமிருந்து ஏவுகணை வாங்குவதற்கு அமெரிக்கா ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதனையும் மீறி இந்தியா ஏவுகணைகளை வாங்கினால் இந்தியாவிற்கு எதிராக தடையை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ரஸ்யாவிடமிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யும் நாடுகளிற்கு எதிராக தடை விதிக்கும் தீர்மானம் அமெரிக்கா காங்கிரசில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.