தமிழ் சினிமா தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வரவேற்பு பெற்று வருகின்றது. சமீபத்தில் வந்த தெறி அமெரிக்கா மற்றும் கனடா பாக்ஸ் ஆபிஸில் 1 மில்லியன் டாலர் கிளப்பில் இணைந்துள்ளது.
இந்நிலையில் இப்படம் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ஓ காதல் கண்மணி படத்தை பின்னுக்கு தள்ளி அமெரிக்கா பாக்ஸ் ஆபிஸில் 7வது இடத்தை பிடித்துள்ளது.
ஓ காதல் கண்மணி $714,334 வசூல் செய்ய, தெறி 11 நாட்களில் $715,378 வசூல் செய்து 7வது இடத்திற்கு வந்துள்ளது.