அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு

115

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும் வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னுக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்கச் சந்திப்பு ஆரம்பமாகி தற்போது நிறைவடைந்துள்ளது.

சிங்கப்பூரில் உள்ள செந்தோசாவின் கப்பேலா ஹோட்டலுக்கு இருவரும் இன்று காலை 9 மணிக்கு முன்னரே சென்றிருந்தனர்.

பின்னர் 9 மணியளவில் இருவரும் கைகுலுக்கி சந்திப்பைத் தொடங்கினர்.

சுமார் 10 வினாடிகள் கைலுக்கிய பிறகு சில வினாடிகள் இருவரும் ஏதோ பேசிக்கொண்டனர்.

தொடர்ந்து, 40 நிமிட குறுகிய பேச்சுவார்த்தைக்கு பிறகு, நீண்ட நேர பேச்சுவார்த்தைக்காக இரு தலைவர்களும் மீண்டும் கூடினார்கள். இவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை சுமார் 45 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

முதன் முறையாக இருவரும் சந்தித்துக்கொண்டதை அடுத்து “வடகொரியாவுடன் சிறப்பான உறவு இருக்கும் என்பதில் ஐயமில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், “இன்றைய சந்திப்பு எளிதில் இடம்பெறவில்லை, இருப்பினும் சவால்களைக் கடந்து இன்று தாங்கள் இருவரும் பேசுவதை சுட்டிக்காட்டினார் கிம்.

  

 

SHARE