அமெரிக்காவின் ஜனாதிபதியான டிரம்ப் வரலாற்றில் என்னைப் போன்ற ஒரு அரசியல்வாதி யாரும் இப்படி நடத்தப்பட்டதில்லை என்று அமெரிக்க ஊடகங்கள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவி ஏற்றுக்கொண்டார். ஆனால், டிரம்ப் குடியரசுக் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் இருந்தே அமெரிக்க ஊடகங்களால் அவர் மீது தொடர் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியது.
இந்த விமர்சனங்களுக்கு ஏற்றார் போல், டிரம்ப்பின் நடவடிக்கைகளும் இருந்தது. அவர் தேர்தலில் தோல்வி அடைவார் என்று கூறப்பட்ட போது, அவை அனைத்தையும் தவிடு பொடியாக்கி வெற்றி பெற்று அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியாக பதவி ஏற்றார்
டிரம்ப் ஜனாதிபதி ஆன பின்பும் அமெரிக்க ஊடகங்கள் அவர் மீது தொடர் விமர்சனங்களை வைத்தது.
இந்நிலையில் டிரம்ப் சமீபத்தில் இராணுவத்தினர் முன்பு நடந்த கூட்டத்தில், என்னை ஊடகங்கள் எப்படி நடத்துகிறது என்று பாருங்கள். வரலாற்றில் என்னைப் போன்ற ஒரு அரசியல்வாதியும் இப்படி நடத்தப்பட்டதில்லை. நான் அதை உறுதியாக கூற முடியும்.
இவர்கள் இப்படி நடத்தியதால்தான் நான் வெற்றி பெற்றேன். இப்படி நடத்தப்படுவதுதான் உங்களை வலிமை மிக்கவராக மாற்றும். எப்போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது, விலகிவிடக் கூடாது. எது சரியென்று படுகிறதோ அதை செய்யாமல் இருக்கக் கூடாது.
எதுவும் வாழ்க்கையில் சுலபம் இல்லை, நீங்கள் சரியாக இருக்கும்பட்சத்தில்தான் அதிக எதிர்ப்பும் இருக்கும் என்று கூறியுள்ளார்.