அமெரிக்க கூட்டுப்படைகளின் தாக்குதலில் ஐ.எஸ் இயக்கத்தின் துணைத் தலைவர் பலி

327
அமெரிக்கா தலைமையிலான கூட்டுபடைகள் இன்று நடத்திய தாக்குதலில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் துணைத்தலைவரான ஹஜி இமாம் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் துணைத் தலைவரான ஹஜி இமாம் என்பவரை உயிருடன் அல்லது பிணமாக பிடிக்க தகவல் தருபவருக்கு 7 மில்லியன் டொலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், ராணுவ பாதுகாப்பு செயலாளரான Ash Carter என்பவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐ.எஸ் தீவிரவாத தலைவர்களில் இரண்டாவது முக்கிய நபராக செயல்பட்டு வந்த ஹஜி இமாம் தாக்குதலில் பலியாகியுள்ளதாக தெரிவித்துள்ளதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும், இது குறித்து Ash Carter இன்னும் சில மணி நேரங்களில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

SHARE