அமெரிக்க ஜனாதிபதிகளை மஹிந்த பின்பற்றுவாரா?

225

mqdefault

ஜனாதிபதி என்பது ஒரு நபருக்கு ஜனநாயக அரசியலை அருகில் கொண்டு வரக்கூடிய மிகவும் கௌரவமான ஒரு பதவியாகும்.

உலகின் சில நாடுகளில் ஜனாதிபதி பதவி அந்த நாட்டு குடிமகன்களுக்காக வழங்கப்படும் நிறைவேற்று அதிகாரம் அற்ற பதவி என்ற போதிலும் இலங்கையில் அது முழுமையான அதிகாரம் கொண்ட ஒரு பதவியாகும்.

ஒருவர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டு அதில் இருந்து விலகிய பின்னர் மீண்டும் செயற்பாட்டு அரசியலில் தேர்தலில் போட்டியிடுவது, அரசியல் கட்சிகளில் பதவி பெறுவது என்பதெல்லாம் அந்த பதவியின் கௌரவம் மற்றும் சம்பிரதாயத்திற்கு தகுதியான ஒன்றல்ல.

அவ்வாறான நிலைமையின் கீழ் இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவது மற்றும் மிகவும் சிறுமையான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பில் அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ஜனாதிபதி ஒருவரினால் தொடர்புபடாத கூட்டுறவு தேர்தல்களில் முன்னாள் ஜனாதிபதி பாரிய அளவில் தலையிட்டுள்ளமைக்கமைய அவர் அடைந்துள்ள தீவிர அரசியல் சீரழிவினை விழிபுணர்வு ஏற்படுத்திக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்காக சில காலம் செயற்பட்ட கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான தொடர்பிலான பேராசிரியர் ஒருவரினால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரிடம் நாம் தீர்மானமிக்க சந்தர்ப்பத்தில் அறிவுரை ஒன்றை வழங்கி கௌரவமான அரசியல் நடத்தை ஒன்றையே எதிர்பார்த்ததாகவும், எனினும் தற்போது முன்னாள் ஜனாதிபதி கூட்டுறவு தேர்தல் ஒன்றிற்கு செல்லும் நிலைமையை காண முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதவியில் ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் தொடர்பில் அமெரிக்காவின் எடுத்துக்காட்டுகள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச அவதானம் செலுத்த வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் இறுதியில் எவ்வித மக்கள் பாராட்டு இன்றில் அரசியலில் இருந்து விடை பெற வேண்டும் என்பது பேராசிரியரின் கருத்தாகும்.

இலங்கை வரலாற்றில் மஹிந்தவை தவிர ஏனைய அனைத்து ஜனாதிபதிகளும் தமது ஓய்வின் பின்னர், செயற்பாட்டு அரசியலிலிருந்து விலகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE