அமெரிக்க ஜனாதிபதியின் மோசமான செயற்பாடு! இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பு

117

நாளாந்தம் அதிகரித்து வரும் அமெரிக்க டொலரின் பெறுமதி காரணமாக இலங்கையர்களுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இலங்கையின் பொருட்களின் விலையில் பெரும் தாக்கும் செலுத்தியுள்ளது.

அதேநேரம் அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பால் வாகனங்களின் விலையும் அதிகரித்து வருவதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில வாகனங்களின் விலை மூன்று இலட்சம் ரூபா வரை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் தெரிவித்துள்ளார்.

டொலரின் வீழ்ச்சி நிலை நீடித்தால் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க டொலரின் விற்பனை விலை இதுவரையில் 168.63 ரூபாயாக பதிவாகியுள்ளது. மேலும் ரூபா பெறுமதியில் வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ரூபாயின் பெறுமதி நாளுக்கு நாள் வீழ்ச்சியடைவதற்கு சர்வதேச காரணங்கள் தாக்கம் செலுத்தியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலைமை இலங்கையில் மாத்திரமின்றி, இந்தியா, பாகிஸ்தான், பிரேசில், ரஷ்யா போன்ற பிரதான நாடுகளிலும் காணப்படுகிறது

இந்தியாவில், 13.1 வீதத்திலும், பாகிஸ்தானில் 11.22 வீதத்திலும், இந்தோனேஷியாவில், 9.61 வீதத்திலும், ரஷ்யாவில் 18.2 வீதத்திலும், பிரேசிலில் 24.4 வீதத்திலும் நாணய பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் 8 வீதம் மாத்திரமே ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பொருளாதார கொள்கைகளே இதற்கு பிரதான காரணமாகியுள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE