அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் பிரபல தொழிலதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ளது.
தற்போது ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு அமெரிக்காவில் உள்ள மாகாணங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்-ம் முன்னணியில் உள்ளனர்.
இந்நிலையில் இன்டியாணா மாகாணத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் டொனால்ட் டிரம்ப் 52 சதவிகி தவாக்குகளை வாங்கி அமோக வெற்றி பெற்றார். அவரது போட்டியாளரும் டெக்சாஸ் மாநில எம்.பி.யுமான டெட் குருஸ் 16 சதவிகித வாக்குகளை வாங்கி பின்தங்கினார்.
குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக தகுதி பெற மொத்தம் 1237 வாக்குகள் தேவை.தொடர்ந்து முன்னிலையில்இருக்கும் டிரம்பு-க்கு இன்னும் 200 வாக்குகள் மட்டுமே தேவைப்படுகிறது.
இதனையடுத்து திடீரென ஜனாதிபதி பதவி வேட்பாளர் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக இரண்டவாது இடத்திலுள்ள டெட் குருஸ் அறிவித்துள்ளார்.
எனவே குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.