அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம்

350

 

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

election-tweeted-o_2390917k1

வெளிவிவகார அமைச்சில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது நாட்டின் ஏனைய ஓர் தலைவர் அமெரிக்காவிற்கு விஜயம் செய்வது சாதாரண ஒர் விடயமாகும்.

எனினும், அமெரிக்க ஜனாதிபதியொருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது சாதாரண விடயமாக கருதப்பட முடியாது.

நல்லாட்சி அரசாங்கத்தின் இந்த அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது.

அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள வலுவான இராஜதந்திர உறவுகளின் காரணமாக ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஜயம் குறித்த இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும்,  எப்போது ஒபாமா இலங்கைக்கு விஜயம் செய்வார் என்பது பற்றிய திகதிகளை அவர் வெளியிடவில்லை.

SHARE