அமெரிக்க தீர்மான வரைபு நாட்டை பிளவுபடுத்தாது: ஹர்சடிசில்வா: குளோபல் தமிழ் செய்தியாளர்

321
இலங்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் தீர்மான வரைபு நாட்டை பிளவுபடுத்தும் ஒன்றல்ல எனக் கூறியுள்ள வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹர்சடிசில்வா இதன் மூலம் நாட்டின் சுயாதீன செயற்பாடுகள் பலமடையும் என்று கூறினார்.
கடந்த காலத்தில் அரசாங்கம் நாட்டை பாதுகாக்கும் வகையில் வெளிநாட்டுக்கொள்கைகளை முன்னெடுக்கவில்லை என தெரிவித்த இந்த அரசாங்கம் அமெரிக்க தீர்மானம் தொடர்பில் சரியான முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆட்சி மாற்றத்துடன் இலங்கையின் பாதுகாப்பு பலமடைந்துள்ளதாக தெரிவித்த அவர் இலங்கை்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை பிற்போடப்பட்டு நாட்டுக்கு எதிரான அழுத்தம் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அறிக்கை வெளிவந்திருந்தால் இராணுவம் தண்டிக்கப்பட்டு பெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கும் என்று கூறிய அவர் புதிய அரசு இராணுவ வீரர்களையும் நாட்டையும் காப்பாற்றியுள்ளதாகவும் கூறினார்.
இப்போதைய அமெரிக்க தீர்மான வரைபு சர்வதேச தலையீட்டை கோருவது என்றும் பிரிவினைக்கு அடித்தளமிட்டுள்ளது என்றும் எதிர்தரப்பினர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
SHARE