கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு 227 பயணிகள் மற்றும் 12 ஊழியர்களுடன் மலேசிய விமானம் சென்றுள்ளது.
பெய்ஜிங்கிற்கு விமானம் சென்று கொண்டிருந்த போது திடீரென்று விமானம் மாயமாகியதைத் தொடர்ந்து, மாயமான எம்.எச்.370 விமானத்தை மலேஷியா, இந்தியா, அவுஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தேடும் பணியில் ஈடுபட்டன.
ஆனால் இதில் எந்த ஒரு பலனும் கிடைக்காததால், கடந்த ஜனவரியில் தேடும் பணிகள் நிறுத்தப்பட்டன.
மலேஷிய அரசு தனியார் துறை தேடல் பணிகளை அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்க கடலாய்வு நிறுவனமான ஓஷன் இன்பினிட்டி விமானத்தை தேடும் பணிகளுக்கான பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.