அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையில் பேச்சுவார்த்தை

177

அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினருக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இரு தரப்பு உறவுகள் குறித்து, கொழும்பில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது அமெரிக்க கடற்படையின் துணை செயலாளர் ரியர் அட்மிரால் பிரான்ஸிஸ் டி மெல்ரொய், இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரால் சிறிமெவன் ரணசிங்கவை சந்தித்துள்ளார்.

இலங்கை கடற்படையினருக்கு அமெரிக்கா வழங்கி வரும் ஒத்துழைப்பிற்கு இலங்கை கடற்படை தளபதி நன்றி பாராட்டியுள்ளார். அத்துடன் இரு தரப்பு அதிகாரிகளும் நினைவு சின்னங்களை பரிமாறிக் கொண்டுள்ளனர்.

SHARE