அமெரிக்க ராணுவத்திற்கு தொழில்நுட்ப வகையில் உதவி புரிய கூகுள் முடிவெடுத்துள்ள விடயம் : எதிர்ப்பு தெரிவித்து பணிவிலகிய பணியாளர்கள்

218

அமெரிக்க ராணுவத்திற்கு தொழில்நுட்ப வகையில் உதவி புரிய கூகுள் முடிவெடுத்துள்ள விடயம், தொழில்நுட்ப உலகில் பெரிய பிரச்சனையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்க ராணுவத்தின் தலைமையிடமான பென்டகனும் மற்றும் கூகுள் நிறுவனமும் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி கூகுளிடம் இருக்கும் சில முக்கிய தொழில்நுட்பங்களை, அமெரிக்க ராணுவத்திடம் பகிர்ந்துகொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கு ‘Project Maven’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது பென்டகனின் மிக ரகசியமான திட்டங்களில் ஒன்றாகும். இதில் அச்சுறுத்தல் என்னவென்றால், கூகுளிடம் பல கோடி மக்களின் தகவல்கள் இருக்கின்றன.

அமெரிக்க ராணுவம் இந்த தகவல்களை வைத்து தான் ‘Project Maven’ திட்டத்தை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் எந்த மாதிரியான விளைவுகள் உண்டாகும் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இத்திட்டத்திற்கு கூகுள் பணியாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களில் முக்கியமான 11 பேர், இத்திட்டத்தினால் அதிருப்தியடைந்து பணியை விட்டு விலகியுள்ளனர்.

அமெரிக்க ராணுவத்தில் Artificial Intelligence தொழில்நுட்பத்தைக் கொண்டு ரோபோக்களை உருவாக்கி பணியில் அமர்த்த முயற்சிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், இந்த திட்டம் பெரும் குழப்பத்தையும், தொழில்நுட்ப உலகில் பிரச்சனையையும் ஏற்படுத்தியுள்ளது.

SHARE