அமைச்சரவைப் பத்திரங்களில் குளறுபடி! பாஸ்கரலிங்கத்தின் உதவியை நாடும் பிரதமர்

250
ranil
அமைச்சரவைக் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் பெரும்பாலான அமைச்சரவைப் பத்திரங்கள் குளறுபடி தன்மையைக் கொண்டவை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக இனிவரும் காலங்களில் அமைச்சரவைப் பத்திரங்களை தயாரிப்பது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் இந்த விடயத்தில் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு தேவையான வழிகாட்டல்களை வழங்குமாறு அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர் பாஸ்கரலிங்கத்திடம் பிரதமர் ரணில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டமொன்றின் போது ஒரு அமைச்சின் அமைச்சரவைப் பத்திரத்தில் அதற்குச் சமாந்தரமான பெயர் கொண்ட வேறொரு அமைச்சின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் பெரும்பாலான அமைச்சரவைப் பத்திரங்களில் ஆங்கில மொழிபெயர்ப்பில் ஏராளம் பிழைகள் காணப்படுவது அண்மைக்காலமாக அவதானிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீவிர கவனம் செலுத்தியிருந்த நிலையில் தற்போது அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசகர் பாஸ்கரலிங்கத்தின் தலையீட்டை இந்த விடயத்தில் வழங்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE