அமைச்சரவையின் அனுமதியுடன் காணி ஆணையாளர் பணி நீக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
காணி ஆணையாளர் ஆர்.பீ.ஆர் ராஜபக்ஸவை பணி நீக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க நேற்றைய தினம் குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
காணி ஆணையாளருக்கு எதிராக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வரும் முறைப்பாடுகளைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் காணி ஆணையாளர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.
காணி ஆணையாளர் ஒருவரை நியமிக்கும் வரையில் இடைக்கால அடிப்படையில் பணியை முன்னெடுக்க ஒருவரை நியமிக்க உள்ளதாக காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.
காணி ஆணையாளரின் நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான காவிந்த ஜயவர்தன மற்றும் சமிந்த விஜேசிறி ஆகியோர் பிரதமரிடம் கடந்த வாரம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.