
அதி சொகுசு வாகனமொன்றை கொள்வனவு செய்வது குறித்து முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவருக்கு வாகனமொன்றை கொள்வனவு செய்ய 350 லட்ச ரூபா ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
எனினும், பி.எம்.டபிள்யு. செவன் சீரிஸ் ரக வாகனமொன்றை கொள்வனவு செய்ய இந்த நிதி மோதுமானதல்ல என நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்த ரக வாகனமொன்றை கொள்வனவு செய்ய 700 லட்சம் தேவைப்படுவதாகவும் புதிய பென்ஸ் ரக வாகனமொன்றையேனும் கொள்வனவு செய்ய 400 லட்சம் ரூபா தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, வாகனம் கொள்வனவு செய்ய 350 லட்சம் ரூபா போதுமானதல்ல எனவும் குறைந்தபட்சம் 400 லட்சம் ரூபா தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இந்தக் கோரிக்கையை நிராகரித்துள்ள ஜனாதிபதி, இந்த கோரிக்கை குறித்து பின்னர் பரிசீலனை செய்யலாம் எனவும் கூறியுள்ளார்.