முல்லை மாவட்ட கலைஞர்களை ஒன்றிணைத்து கனடா மறுவாழ்வு அமைப்பின் அனுசரணையோடு, புதிய பீனிக்ஸ் முல்லைத்தீவு மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வன்னீஸ்வரம் இசைக்குழுவின் அங்குரார்ப்பண நிகழ்வு வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் 27-08-2016 சனிக்கிழமை புதுக்குடியிருப்பில் உத்தியோக பூர்வமாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் தனது கருத்தை தெரிவித்த அமைச்சர், 2014 ஆம் ஆண்டு முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் புனர்வாழ்வு பெற்ற போராளிகள் மாவீரர்களின் குடும்பங்கள் ஆகியோரை சந்தித்த சந்தர்ப்பத்தில் தன்னுடைய மனதை மிகவும் பாதித்த விடயத்தாலேயே இவ்வாறு யுத்தத்தால் மிகவும் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்களை எதிர்காலத்தில் யாருடைய கையையும் எதிர்பார்க்காமல் அவர்களது சொந்த உழைப்பில் தம்முடைய வாழ்வாதாரத்தை நடத்தவேண்டும் என்ற எண்ணத்தோடே அவர்களுக்கான உதவித்திட்டத்தை ஆரம்பித்தேன் என்றும், தற்போது இந்த வன்னீஸ்வரம் இசைக்குழுவின் உதயத்தால் நிச்சயமாக வலுவிழந்தோருடைய வாழ்வாதாரம் உயரும் என்று நான் நம்புகின்றேன் என்றும், உங்களில் நானும் ஒருவனாக இருப்பதால் என்னிடம் இருந்து எதனை எதிர்பார்க்கின்றீர்களோ அதனை என்னால் முடிந்தளவுக்கு நிறைவேற்றித்தருவேன் என்றும் தெரிவித்தார்.