அமைச்சர் டெனிஸ்வரனுக்கு சேவைநலன் பாராட்டு விழா

280

மன்னார் மாவட்டத்தில் நான்கு கிராமங்கள் ஒன்று சேர்ந்து வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, வர்த்தக வாணிபம் மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு சேவைநலன் பாராட்டு விழா 25.02.2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நறுவிலிக்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வினை வஞ்சியன்குளம், நறுவிலிக்குளம், புதுக்கமம், மாதிரிக்கிரமம் ஆகிய நற்பதிவாழ் மக்கள் குறிப்பாக கிராமமட்ட அமைப்புகளான கிராம அபிவிருத்தி சங்கங்கள், மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்கள், ஆலயசபைகள் மற்றும் ஊர் பெரியவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வினை வஞ்சியன்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை ஞானதிக்கம் அடிகளார் தலைமை தாங்கியதோடு, சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை விக்டர் சோசை அடிகளார், ஆயரின் செயலாளர் அருட்தந்தை முரளிதரன், அருட்தந்தை இராசநாயகம், மெதடிஸ்த மதகுரு ரவி முருகுப்பிள்ளை, மதகுருமார்கள், நானாட்டன் பிரதேச செயலாளர் பரமதாஸ், மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் சுகந்தி செபஸ்டியன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அங்கு உரையாற்றிய அதிதிகள், வடமாகணத்தில் அமைச்சர் அவர்கள் பொறுப்பேற்றதிலிருந்து இன்றுவரை முழுவீச்சோடு தமது அமைச்சு சார்ந்த பொறுப்புக்களை மேற்கொள்ளுவது மட்டுமல்லாது இனங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் சமய ஒற்றுமையினை கட்டியெழுப்ப எடுத்துவரும் முயற்ச்சிகளை பாராட்டியதோடு, இன, மத பேதமின்றி அவரது செயற்ப்பாடுகள் வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்களிலும் காணப்படுவது, மன்னார் மாவட்டத்துக்கு பெருமை சேர்பதாக இருப்பதாகவும் சுட்டிக்காடினர்.

பின்னர் அக்கிராமங்களில் நிலவுகின்ற பல்வேறு குறைபாடுகள் அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. விசேடமாக நறுவிலிக்குளம் பாடசாலையில் குடிநீர்தாங்கி இல்லாது குடிநீருக்கு மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாகவும் அப்பிரச்சனை இந்த வருடத்திற்குள் தீர்த்து கொடுக்கப்படும் எனவும் அமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளித்தார். மேலும் தனது இவ்வருடத்திற்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியிலிருந்து அக்கிரமங்களில் வசிக்கும் வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான உபகரணங்கள் பங்குத்தந்தை அவர்களினூடாக வழங்கப்படும் எனவும் உறுதியளித்தார்.

இவற்றுக்கப்பால் அங்கு மக்களின் கருத்தாக தெரிவிக்கப்பட்ட முக்கிய விடயம், வடமாகணத்தில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான சேவையினை வழங்குவதற்கு தங்களினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு ஒருசிலர் முட்டுக்கட்டையாக இருப்பதனை மக்களாகிய தாங்கள் உணர்ந்துள்ளதாகவும், பொதுமக்களின் நலன்கருதி தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எவரேனும் சட்டமுரணாக செயற்படுவார்களாயின் அதற்கெதிராக குரல் கொடுபதற்க்கு மக்களாகிய நாங்கள் இருக்கின்றோம் என்றும் துணிந்து தங்களது செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் வினயமாக கேட்டுக்கொண்டுள்ளனர்.

SHARE