அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

185

அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவே இவ்வாறு இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் யசோத ரங்கே பண்டாரவை, ஆராச்சிகட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தமை, குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தியமை, வாகன விபத்தை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் வாள் ஒன்றை வைத்திருத்தல் ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

SHARE