அமைச்சர் ரிசாத் பதியுதீன் மன்னார் விஜயம்!

263
கைத்தொழில், வாணிபத்துறை அமைச்சர் ரிசாத் பதியுதீன் இன்று மன்னாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இதுவரை மன்னாருக்கு வருகை தராத அமைச்சர் ரிசாத் பதியுதீன், அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டவுடன் இன்று தனது மாவட்டத்துக்கு விஜயம் செய்துள்ளார்.

மன்னார் மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களுக்கும் குறுகிய விஜயங்களை மேற்கொண்டு வரும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தை இலங்கையின் முன்மாதிரி மாவட்டமாக மாற்றுவதற்குரிய வகையில் தனது சேவையை இன, மத பாகுபாடின்றி முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன், அதற்காக அனைத்து மக்களினதும் ஒத்துழைப்பை கோரியுள்ளார்.

அமைச்சர் ரிசாதின் மன்னார் விஜயத்தின்போது அவருடன் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாவி, முன்னாள் பிரதியமைச்சர் அமீரலி, அநுராதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ஹாஜியார் ஆகியோரும் உடன் சென்றுள்ளனர்.

SHARE