அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வழங்க முடிந்தால், கூட்டு எதிர்க்கட்சியில் 10 பேர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்காக கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
பாத யாத்திரையின் பின்னர் கூட்டு எதிர்க்கட்சி சரிந்து விழ ஆரம்பித்துள்ளது. சிலர் அரசாங்கத்துடன் இணைய முயற்சித்து வருகின்றனர்.
19வது அரசியலமைப்புத் திருத்தம் காரணமாக மேலும் அமைச்சு பதவிகளை வழங்க முடியாது. அமைச்சு பதவிகளை வழங்க முடிந்தால், கூட்டு எதிர்க்கட்சியில் 10 பேர் கூட எஞ்சியிருக்க மாட்டார்கள் என லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.