அமைச்சைப் பயன்படுத்தி சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது-பழனி திகாம்பரம்

209

என்னுடைய அமைச்சைப் பயன்படுத்தி சம்பள உயர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாது எனத் தெரிவித்த, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியே வந்தால் மாத்திரமே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

அரசியல் நெருக்கடி நிலை தீர்க்கப்பட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சராக இன்று அமைச்சுப் பொறுப்புக்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மலையகத்தில் வாழ்வாதாரம் சார்ந்த மிக முக்கிய பிரச்சினையாக பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள விவகாரம் காணப்படுகின்றது. சம்பள உயர்வினைக் கோரி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொண்டதன் ஊடாக சம்பள உயர்வைப் பெற்றுத்தருவேன் என எதிர்பார்த்தால் அது என்னால் இயலாத காரியமாகும் எனவும் அவர் இதன்போது

SHARE