பிரசெல்ஸில் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நடைபெற்ற அமைதிபேரணியின் போது கலவரம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமான பிரசெல்ஸின் பங்குச் சந்தை அலுவலம் அமைந்திருக்கும் கட்டிடத்தின் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளாமானோர் கலந்துகொண்டனர். அப்போது ”தி நேசன்” என்ற வலதுச்சாரி ஆர்ப்பாட்டக்காரர்கள் இந்த போரணியில் புகுந்துள்ளனர். ஆர்ப்பாட்டத்துக்குள் கலவரத்தை உண்டாக்கும் வகையில் கோசங்களை எழுப்பிய அவர்கள் தடை செய்யப்பட்ட நாசிக் சலியூட் அடித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது வலதுசாரி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், அகதிகள் சார்பு குழுக்களை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வந்த பொலிசார் இரு தரப்பினரையும் அமைதியாக கலைந்து செல்லும்படி கூறியுள்ளனர். எனினும் அவர்கள் கலைந்துபோகாமல் இருந்ததால் கண்ணீர் புகைக்குண்டு மூலம் அவர்களை பொலிசார் விரட்டியடித்தனர். சுமார் 1000 எதிர்ப்பாளர்கள் வரை இந்த பேரணியில் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கலவரத்தின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பதற்றம் ஏற்பட்டது. இறுதியில் பொலிசார் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை விரட்டியடித்தனர். பெல்ஜியத்தின் பிரதமர் சார்லெஸ் மிட்செல் உள்ளிட்ட பலர் இந்த கலவரத்துக்கு தங்களில் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். இந்த மோதல் தொடர்பாக சுமார் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |