அம்பலாங்கொடையில் துப்பாக்கி சூடு ஒருவர் பலி

264

அம்பலாங்கொட துறைமுகப் பகுதியில் இனந்தெரியத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பலாங்கொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, தென் மாகாணத்தில் அண்மைக்காலங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

police

SHARE