அம்பலாங்கொடையில் பெருந்தொகை போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலாங்கொடை பொலிஸார் குறித்த போதைப் பொருளை மீட்டுள்ளனர்.
சுமார் 21 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் இவ்வாறு இன்று மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் சந்தைப் பெறுமதி ஆறு கோடி ரூபா எனத் தெரிவிக்கப்படுகிறது.
கடலில் மிதந்து வந்த போதைப்பொருள் பொதியை தாம் எடுத்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்