அம்பலாங்கொடை பகுதியில் துப்பாக்கிச் சூடு! வர்த்தகர் பலி

575

 

அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

சுமனதாஸ வர்த்தக குழுமத்தின் உரிமையாளரான 53 வயதான எச்.ஜி. பிரேமசிறி என்பரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய ஜீப் வண்டியில் பயணம் செய்த அவரை பின்தொடர்ந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக்கொலைச் செய்துள்ளதுடன், தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, அம்பலாங்கொடை பகுதியில் வர்த்தகர் பலர் அண்மையில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE