அம்பாந்தோட்டையில் ஆர்ப்பாட்டமொன்றின்போது பேருந்துகளை தாக்கி சேதம் விளைவித்தமைக்காக ஆறு பேர் கைது

340

அம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பேருந்துகளை தாக்கி சேதம் விளைவித்தமைக்காக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அம்பாந்தோட்டை-திஸ்ஸமகராமா வீதியில் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர்விநியோக வசதிகளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்,குடிநீர் பற்றாக்குறை காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அரசாங்கம் அலட்சியம் செய்கின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.

பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களை பொலிஸார் கலைக்கமுயன்றவேளை மோதல் ஏற்பட்டது, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பேருந்துகளை தாக்கியுள்ளனர். இந்த மோதல்கள் காரணமாக மூன்று பொலிஸார் காயமடைந்துள்ளதுடன் பேருந்துகளை தாக்க முயன்ற ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

SHARE