அவர் இன்று அதிகாலை உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் கொள்வனவு செய்த வாகனம் ஒன்றுக்கு தவணை கட்டணம் செலுத்தாததால் நிறுவனத்தால் மீள பெற்றுக்கொள்ளவிருந்த நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு தீ வைத்துக் கொண்டார்.
மேலும் அவர் அம்பாறை பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய நபர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி
கேகாலை மொலகொட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வேகமாக வந்த பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் பாதை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியுடன் மோதியதனால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி, கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பொலிஸ் அதிகாரி தெரணியகல பிரதேச பொலிஸ் நிலையத்தில் கடமை புரிந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.