அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமியை, சிறுமியின் சகோதரியின் கணவர் கடத்திச் சென்றுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்
அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவிலுள்ள குறித்த சிறுமி, பெற்றோரின் பராமரிப்பில் இருந்தபோது கடந்த 24 ம் திகதி காணாமல் போயுள்ளார்.
அத்துடன் சிறுமியின் சகோதரியின் 3 பிள்ளையின் தந்தையான 22 வயதுடையவர் காணாமல் போயுள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் சகோதரியின் கணவர் சிறுமியை கடத்திச் சென்றுள்ளமை தெரியவந்ததையடுத்து பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்டுள்ள சிறுமியை மீட்க்கும் நடவடிக்கையில் அக்கரைப்பற்று பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.