அம்பாறை சிர்பாததேவி வித்தியாலம் வெள்ளத்தில் மூழ்கியது

281
அம்பாறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலயம் முழ்கியமையால் கல்வி நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இதனால் மாணவர்கள் அனைவரும் நேற்று பாடசாலைக்குச் செல்லமுடியாத  நிலை ஏற்பட்டது. தொடர்ந்து  அருகிலுள்ள விபுலானந்த மகா வித்தியாலயத்திற்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.

நேற்று முன்தினம் பெய்த அடைமழை காரணமாக அம்பாறை மாவட்டமெங்கும் தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்றும் கனமழை தொடர்ந்ததுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது.

குறிப்பாக, அம்பாறைக்கு கிழக்கேயுள்ள மல்வத்தைக் கிராமமும் முற்றாக வெள்ளப் பாதிப்புக்குள்ளாகியது.

இப்பாடசாலையின் அமைவிடமும் மைதானமும் வயலும் சூழ்ந்த தாழ்நிலப்பிரதேசத்தில் அமைந்திருப்பதே வெள்ளப்பாதிப்புக்கு காரணமென பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் மல்வத்தை விபுலானந்த மகா வித்தியாலயத்திலேயே நடைபெற்று வரும் நிலையில் உரிய அதிகாரிகள் இதை கவனத்திற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

SHARE