அம்பாறை தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

251
கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் இன்று மாலை 3.00 மணியளவில் முடிவுக்கு வந்தது.

திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்பாக தொடர்ந்து 15 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை மேற்கொண்டிருந்த அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளுக்கும் அரசமட்ட உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தது இப்போராட்டமானது கைவிடப்பட்டது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன், மற்றும் மாகாணசபை உறுப்பினர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள் குறித்த பட்டதாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்த்து இப்போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டமை தொடர்பில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை எனவும் அவ்வாறு புறக்கணிக்கப்பட்டிருப்பின் அது கடந்த அரசாங்கத்தில் நடந்தவையாக இருக்கும் எனவும்,

பாதிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் பட்டதாரிகளது வேலைவாய்ப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்படும்போது 2015ம் ஆண்டு வெளியேறிய பட்டதாரிகளும் உள்வாங்கப்படுவர்.

மேலும் சிங்கள பட்டதாரிகள் கோரப்பட்ட விடயம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனுள் தமிழ் பட்டதாரிகளும் உள்வாங்கப்பட்டு மறுபடியும் அவ விண்ணப்பங்கள் கோரப்படும் எனவும் பட்டதாரிகளுடன் அதிகாரிகள் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

SHARE