(Dilan Maha)
அரசாங்க தகவல்திணைக்களம், அம்பாறை மாவட்டசெயலகமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு அம்பாறை மாவட்டத்தில்அமைந்துள்ள விக்கிரமசிங்க மண்டபத்தில்
அம்பாறை மாவட்ட செயலாளர்.டிஎம்.டி .பண்டாரநாயக்கா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் என்டபிறைசஸ் ஶ்ரீலங்கா என்னும் தலைப்பில் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஊடகவியலாளருக்கு விளக்கமளிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்கள் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு சென்றடைவதற்கான ஒழுங்குகளை ஊடக ரீதியாக மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ், சிங்கள, முஸ்லிம் ஊடகவியலாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள ஊடக சங்கத்தினர் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

