அம்பாறை மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியில்!

253

இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் கணிசமான பங்கினை வகிக்கும் அம்பாறை மாவட்டத்தில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பமாகியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் பருவ மழை பொழிய ஆரம்பித்திருப்பதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் பெரும்போக வேளாண்மைச் செய்கையை ஆரம்பித்துள்ளனர்.

வாய்க்கால்களிலும் நீர்நிலைகளிலும் நீர் நிரம்பிக் காணப்படுகின்றது. விவசாயத்திற்குத் தேவையான நீர் திறந்து விடப்பட்டுள்ளதனால் வாய்க்கால்களில் நீர் மடை திறந்த வெள்ளம் போல் பாய்ந்து வருகிறது.

இம்முறை 167500 ஏக்கரில் பெரும்போக வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

அதற்கான ஆரம்ப கட்ட உழவு வேலைகள் மற்றும் விதைப்பு தற்போது இடம்பெற்று வருகின்றன. மழையை எதிர்பார்த்து நெற்செய்கை மேற்கொள்ளப்படும் பெரும்போகத்திற்காக மானிய உர விநியோகத்திற்கான ஏற்பாடுகள் முன்னதாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதே வேளை மேட்டு நிலப் பயிர்ச் செய்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-160-600-053-800-668-160-90-4

 

 

 

 

SHARE