அம்மாவாக கலக்கிய நடிகை சரண்யா பொன்வண்ணன் முழு குடும்பத்தை பார்த்தீர்களா?

122

 

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடித்துவிட்டு பிறகு மீண்டும் நடிக்க வந்து அண்ணி, அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபலங்கள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன்.

முதல் படத்திலேயே கமலுக்கு ஜோடியாக நடித்த சரண்யா பொன்வண்ணன் குறுகிய காலத்திற்குள் இவர் பெரிய அளவில் பிரபலம் அடைய தொடங்கினார்.

1995ம் ஆண்டு நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

அதன்பின் நடிக்காமல் இருந்த சரண்யா 2000ம் ஆண்டில் மீண்டும் நடிப்பை தொடங்கினார்.

குடும்பம்
பொன்வண்ணனை திருமணம் செய்த சரண்யாவிற்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அண்மையில் தான் தனது மூத்த மகளுக்கு திருமணம் செய்தனர்.

தற்போது சரண்யா பொன்வண்ணன் தனது மொத்த குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அழகிய குடும்பம் என வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

SHARE