அம்மாவாக நடிக்க மாஜி ஹீரோயின்கள் கடும் போட்டி

270

தமிழ்ப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஈடாக, முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு அம்மாவாக நடிக்கவும் கடும் போட்டி நிலவுகிறது. முன்னாள் ஹீரோயின்கள்தான் இந்த போட்டியில் இருக்கிறார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழ் சினிமாவில் அம்மாவாக நடிப்பதற்கென்றே சில நடிகைகள் இருந்தார்கள். அவர்கள் அறிமுகமாகும்போதே அம்மா நடிகையாகவே அறிமுகமானார்கள். லட்சுமி ராமகிருஷ்ணன், மீரா கிருஷ்ணன், கம்பம் மீனா, சுஜாதா உள்பட பலர் ஹீரோக்களுக்கோ, ஹீரோயின்களுக்கோ அம்மாவாக அறிமுகமானர்கள்.

ஆனால் தற்போது முன்னாள் ஹீரோயின்கள் பலர் அம்மாவாக நடிக்க முன்வந்திருப்பதால் கடும் போட்டி நிலவுகிறது. சரண்யா, ஊர்வசி உள்ளிட்ட சில ஹீரோயின்கள்தான் தங்கள் மார்க்கெட் இறங்கியதும் உடனேயே அம்மா கேரக்டர்களுக்கு மாறினார்கள். மற்ற ஹீரோயின்கள் சினிமாவை விட்டு விலகி இருந்தார்கள், அல்லது திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார்கள். இப்போது இவர்கள் அம்மாவாக நடிப்பதற்கு முன் வந்திருக்கிறார்கள்.

சினிமாவில் அம்மாவாக நடிப்பதற்கு இப்போது ஒரு புதிய டிரெண்ட் உருவாகி இருக்கிறது. சிறு பட்ெஜட் படங்களில் அம்மாவாக நடிப்பதற்கு ஒரு வரிசை நடிகைகள், மீடியம் பட்ஜெட் படங்களில் நடிப்பதற்கு ஒரு வரிசை நடிகைகள் என தனித்தனியாக இருக்கிறார்கள். பெரிய ஹீரோக்களின், அல்லது ஹீரோயின்களின் அம்மாவாக முன்பு பிரபலமாக இருந்த ஹீரோயின்களை நடிக்க வைக்கும் டிரெண்ட் உருவாகி இருக்கிறது. அப்படி நடிக்கும் மாஜி ஹீரோயின்களுக்கு கணிசமான சம்பளம் வழங்கப்படுவதால் அவர்களும் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.

ராதிகா, நதியா, சுகன்யா, ரேகா, அம்பிகா, பானுப்பிரியா, துளசி, ரேவதி, சீதா, ரம்யா கிருஷ்ணன் என மாஜி ஹீரோயின்கள் அம்மா அவதாரம் எடுத்திருக்கிறார்கள். விஜய், அஜீத், சூர்யா, தனுஷ் போன்ற நடிகர்களுக்கு அம்மாவாக நடிக்க இவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. அஜீத், விஜய் அம்மாக்களுக்கு பெரிய சம்பளம் வழங்கப்படுகிறது. இதனால் இவர்களது அம்மாவாக நடிக்க முயற்சிக்கிறார்கள். இப்போது இதன் அடுத்த டிரெண்ட் என்னவென்றால் மிக சமீபத்திய ஹீரோயின்களை அம்மாவாக நடிக்க வைப்பது. ஸ்ரேயா, கிரண், சிம்ரன், மீனா ேபான்றவர்கள் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஹீரோயின்களுக்கு நிகராக அம்மா கேரக்டர் களுக்கும் போட்டி நிலவுவது பலரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

Kollywood-news-1622

SHARE