அம்மாவுக்கு கேன்சர்.. மேடையில் கண்கலங்கிய பிரியா பவானி ஷங்கர்

94

 

செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக அறிமுகம் ஆனவர் பிரியா பவானி ஷங்கர். அவர் முதலில் சில சீரியல்களில் ஹீரோயினாக நடித்த நிலையில் மேயாத மான் படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.

தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார் பிரியா பவானி ஷங்கர்.

அம்மாவுக்கு கேன்சர்
இன்று ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியா பவானி ஷங்கர் தனது அம்மாவுக்கு கடந்த வருடம் கேன்சர் இருப்பது கண்டறியப்பட்டதாக கூறி கண்கலங்கி இருக்கிறார்.

அது ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் குணப்படுதிவிடலாம் என மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

SHARE