கடந்த வாரம் மதுரை முத்துவின் மனைவி இறந்தது அவர் வாழ்வில் நீங்கா துயரத்தை ஏற்படுத்தியது. நம்மையெல்லாம் சிரிக்க வைத்த இவர் வாழ்க்கையில் இப்படி ஒரு துயரமா என தமிழக மக்கள் அனைவரும் வருத்தப்பட்டனர்.
இந்நிலையில் சமீபத்தில் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றில் பேட்டியளித்த முத்து ‘என் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா இறந்தது கூட இன்னும் புரியவில்லை.
அம்மா எப்ப வருவாங்க என்று கேட்கிறார்கள், நானும் அம்மா கோவிலுக்கு சென்றுள்ளார் என கூறி வருகிறேன், எனக்காக 24 மணி நேரமும் சாமி கும்பிடுவார்.
ஆனால், அவரை எந்த சாமியும் காப்பாற்ற வரவில்லையே, இனி நான் எந்த சாமியையும் கும்பிட மாட்டேன், என் மனைவிக்கு சிலை செய்து என் வீட்டில் வைத்து என் குலசாமியாக கும்பிட போகிறேன்’ என உருக்கமாக கூறியுள்ளார்.