அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும்!- புபுது ஜாகொட

302
download-13
அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டம் தொடரும் என முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

கொழும்பு மருதானையில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

சிறைச்சாலை திணைக்களத்தின் சாதாரண நடைமுறைக்கு புறம்பான வகையில் குமார் குணரட்னம் கேகாலையிலிருந்து அனுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று தெளிவுபடுத்தப்படவில்லை.

குமார் குணரட்னம் கேகாலையிலிருந்து அனுராதபுரத்திற்கு மாற்றப்படுவதற்கு போதிய தெளிவான காரணங்கள் எதுவும் கிடையாது.

குமார் குணரட்னத்திற்கு எதிராக தெளிவாக அரசியல் பழிவாங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது அம்பலமாகியுள்ளது.

அரசியல் பழிவாங்கல்களை நிறுத்துவதாக அராசங்கம் வாக்குறுதி அளித்திருந்தது.

குமார் குணரட்னத்தின் கைதியின் பின்னணியில் ஜே.வி.பி செயற்பட்டுள்ளதா என்பது தெரியாது. எனினும், அவ்வாறு பின்னணியில் ஜே.வி.பி செயற்பட்டால் அது அரச சக்திகளுடன் இணைந்து மற்றுமொரு இடதுசாரி கட்சியை ஒடுக்குவதாகவே பொருள்படும்.

குமார் குணரட்னம் அரசங்கத்திற்கு எதிராக செயற்படுவதனால் பிரஜாவுரிமை வழங்கவில்லை என்பதனை அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

SHARE