இவர்கள், மைத்திரியையும் ரணிலை நன்றாக ஏமாற்றி வருவதாகவும் தன்னை ஏமாற்ற 10 வருடங்கள் சென்றாலும் மைத்திரிக்கும் ரணிலுக்கும் இவர்கள் இரண்டு வருடங்களில் தமது வேலையை காட்டி விடுவார்கள் என்பது நிச்சயம் எனவும் அவர் கூறியுள்ளார்.
ஊடகவியலாளர் சிலரிடம் இதனை கூறியுள்ள முன்னாள் ஜனாதிபதி, இவற்றை ஊடகங்களில் வெளியிட வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இவற்றை ஊடகங்களில் வெளியிட்டால், மைத்திரியும் ரணிலும் குழம்பி போய், தமது தவறுகளை திருத்திக்கொள்ள முயற்சிப்பார்கள்.
அத்துடன் எனது திட்டமும் குழம்பி போகும். முடிந்தளவு ஜனாதிபதியும், பிரதமரையும் புகழ்ந்து எழுதுங்கள். நீங்கள் அறிந்து கொள்வதற்காகவே எனது கருத்தை கூறுகிறேன். பகிரங்கப்படுத்த அல்ல.
என்னிடம் இருந்த வர்த்தகர்களையும், அரசியல் சகாக்களையும் நான் திட்டமிட்டு அரசாங்கத்திற்குள் அனுப்பி வைத்திருக்கின்றேன்.
உள்ளே என்ன நடக்கின்றது என்பதை அவர்கள் தினமும் எனக் தெரியப்படுத்துவார்கள்.
நாங்கள் நினைத்தை விட திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது எனவும் மகிந்த ராஜபக்ச ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.