அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை! இரகசியம் பேணும் நாமல்

452

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ள எதிர்ப்பு பேரணி நடைபெறும் இடத்தினை முன்கூட்டியே அறிவிக்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கத்துக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி எதிர்வரும் ஐந்தாம் திகதி எதிர்ப்பு பேரணி ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. கொழும்பில் இந்த பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பில் நடாத்த எதிர்பார்த்துள்ள கூட்டம் எங்கு நடைபெறும் என்பது முன்னதாக அறிவிக்கப்பட மாட்டாது என நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,

“கூட்டம் நடைபெறும் இடத்தை முன்னதாக அறிவிக்க முடியாது. அவ்வாறு அறிவித்தால், அரசாங்கம் கூட்டத்தை நடாத்துவதற்கு நீதிமன்றத்தில் தடை உத்தரவைப் பெற்றுக் கொள்ளும்.

ஆகையினால், கூட்டம் இடம்பெறும் இடத்தினை முன்னதாக சொல்லாமல் இருப்போம்” என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE