
அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இன்றைய தினம் கொழும்பில் பேரணியொன்று நடத்தப்பட உள்ளது.ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்ச் சங்கங்களினால் இந்தப் பேரணி நடத்தப்பட உள்ளது.தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை சீர்குலைக்க கூடாது உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது.
தேசிய இளைஞர் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து இந்தப் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு தாமரை தடாக அரங்கத்திற்கு அருகாமையில் ஆரம்பமாகும் பேரணி, கொழும்பு ஹைட் மைதானம் வரையில் பயணிக்கவுள்ளது.
இந்தப் போராட்டத்தில் சுமார் 50,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் வாய்ப்புக்களை வழங்குதல் மற்றும் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.