அரசாங்கத்துக்கு தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

132

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போது அதிகரித்துள்ள எரிபொருள் விலையேற்றத்தையடுத்து பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு பஸ்கட்டண விலைச் சூத்தரமொன்றை ஏற்படுத்தி தமது பிரச்சினைக்கு தீர்வை வழங்குமாறு இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் அரசாங்கம் தமது கோரிக்கைக்கு தீர்வு வழங்காவிடில் தாம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்து காலக்கெடுவும் வழங்கியுள்ளனர்.

அரசாங்கத்தினால் தீர்வொன்று வழங்கப்படாதவிடத்து இம்மாதம் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE