அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிக்கின்றது முன்னாள் ஜனாதிபதி

232

அரசாங்கம் சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் உள்ள தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பணிப்புறக்கணிப்பை சீர்குலைக்க அரசாங்கம் அண்மையில் எடுத்த தீர்மானம் இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

பொலிஸாரின் செயற்பாடுகள், பெட்ரோலிய களஞ்சியத்திற்குள் இராணுவத்தை அனுப்பியது, மாணவர்கள் மீதான தாக்குதல், நாட்டின் வளங்களை விற்பனை செய்தல் என அரசாங்கம் தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாட்டு மக்கள் இவை குறித்து உணர ஆரம்பித்துள்ளனர்.

மக்களின் நிலைப்பாட்டுக்கு செவி கொடுக்காத தற்போதைய அரசாங்கம். எதனை விற்பனை செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதோ அதனை விற்பனை செய்கிறது.

அரசாங்கம் சர்வாதிகார பயணத்திற்கு தேவையானவற்றை உருவாக்கி வருகிறது எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

SHARE