அரசாங்கம் தவறு செய்கிறது நல்லிணக்கம் ஏற்படாது

259

அரசாங்கம் மேற்கொண்டு வரும் பல்வேறு தவறான செயல்கள் காரணமாக நல்லிணக்கம் ஏற்படாது என முன்னாள் ஜனாதிபதியான நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அரசாங்கம் மேற்கொள்ளும் இப்படியான தவறான செயல்கள் காரணமாக மக்கள் ஆர்ப்பாட்டங்களிலும் ஏனைய செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்

SHARE