
அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
பாராளுமன்ற முறைமையிலான பிரதமர் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நவீன பாராளுமன்ற முறைமைகளுக்கு அமைய புதிய ஓர் கட்டமைப்பை உருவாக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.