அரசின் செயற்பாடுகள் காரணமாக அறிக்கையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

276

 

“ஜனவரி 8 வெற்றி ஈட்டப்பட்டிருக்காவிடில் இந்த நாடு பலத்த சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும். நூற்றுக்கு மேற்பட்ட சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். முன்னாள் ஆட்சியாளர்கள் பலருடைய பெயர்கள் அறிக்கையில் உள்ளடக்கப்படக்கூடிய சாத்தியங்கள் காணப்பட்டன. கடந்த எட்டு மாதகாலமாக எமது அரசு செயற்படுத்திய கொள்கைகள், அரசின் செயற்பாடுகள் காரணமாக அறிக்கையின் கடுமை குறைக்கப்பட்டுள்ளது என்பதை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தவேண்டிய கடப்பாடு ஊடகங்களுக்கு உண்டு.”

maithripala-688455451

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஊடகங்களின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் பிரதானிகள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்தார். மிகவும் குறுகிய நேர அவகாசத்தால் ஏற்பாடுசெய்யப்பட்ட இந்தச் சந்திப்பின்போது ஜனாதிபதியுடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ ஆகியோரும் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தனர். கொழும்பு, கோட்டை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது சமகால அரசியல் நிலைமை, நாட்டின் தற்போதைய சூழ்நிலை, ஜெனிவா மாநாடு தொடர்பான அரசின் நிலைப்பாடு குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இந்தச் சந்திப்பில் இரண்டு விடயங்கள் ஜனாதிபதியாலும், பிரதமராலும் வலியுறுத்திக் கூறப்பட்டன. ஒன்று ஜனவரி 8 இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிட்டால் நாடு பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கும் என்பது. மற்றது சீபா தொடர்பானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமீபத்தில் டில்லி சென்றபோது சீபா குறித்து ஒப்பந்தம் எதுவும் செய்துகொள்ளவில்லை என்றும் பேச்சுகூட நடத்தப்படவில்லை என்றும் உறுதியாகத் தெரிவிக்கப்பட்டது. நேற்றைய சந்திப்பில் ஜனாதிபதி மேலும் கூறியவை வருமாறு:- “ஜனவரி 8இற்கு முன்பிருந்த நிலைமை இன்று இல்லை. உலக நாடுகள் எமது நாட்டில் நம்பிக்கை வைக்க ஆரம்பித்துள்ளன. சர்வதேச உறவுகளில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. முன்னைய ஆட்சியின்போது அதிகாரமுள்ள நாடுகள் எப்படி நடந்துகொண்டன என்பது உங்களுக்குத் தெரியும். எமது வெளிநாட்டுக் கொள்கைகள், சர்வதேச நடவடிக்கைகள் ஆகியவற்றில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஐ.நா. அறிக்கை ஜனவரி 8இற்கு முன் தயாரிக்கப்பட்டிருந்தால், ஜனவரி 8இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்காவிடில் முன்னாள் ஆட்சியாளர்கள் பலரது பெயர்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கும் சாத்தியம் இருந்தது. எமது 8 மாத ஆட்சியின் பலனால் அறிக்கையின் சாரம் குறைந்துள்ளது என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நடவடிக்கைகளை மிகவும் குறுகிய காலத்தில் மேற்கொண்டோம். மக்களிடம் காணிகள் திருப்பி ஒப்படைக்க்பபட்டுள்ளன. மனித உரிமைகள் தொடர்பாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தலைமையில் தேசிய சமாதான செயலணி அமைக்கப்பட்டுள்ளது. எமது இலக்கை அடைய இன்னும் நீண்டதூரம் நாம் பயணம் செய்யவேண்டியுள்ளது. மஹிந்த அரசு தொடர்ந்து இருந்திருந்தால், ஆழமான பிரச்சினைகள் தோற்றுவிக்கப்பட்டிருக்கும். சில இனவாதச் சக்திகள் நாட்டு மக்களை தீய வழியில் செயற்படுத்த முயற்சிக்கின்றன. இவற்றுக்கு முகங்கொடுக்க நாம் தயாராக இருக்கின்றோம்

 

SHARE